திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்..,
மார்த்தாண்டம்:திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து திமுக கொடியேந்தியபடி மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்பு தெரிவித்து கோஷமிட்டனர். நகர திமுக செயலாளர் பொன்.ஆசைதம்பி தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் பப்புசன் முன்னிலை வகித்தார். இதில் மேல்புறம் ஒன்றிய செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன், வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் குமார், விவசாய தொழிலாளர் மாவட்ட அமைப்பாளர் நீலகண்டன், தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் தினகர், நகர அவைத்தலைவர் மாகின், கவுன்சிலர்கள் அருள்ராஜ், பாலு உள்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திமுக வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்பு உடைகள் அணிந்திருந்தனர். மேலும் திருவட்டார், குலசேகரம் பகுதிகளிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது ஆற்றூரில் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் தனது வீட்டின் முன் கருப்பு கொடி ஏற்றியதோடு கட்சி நிர்வாகிகளின் வீடுகளிலும் கருப்பு கொடிகளை ஏற்றி வைத்தார்.