சிபிஎம் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு !!திமுகவிடம் சொல்லி இருக்கிறோம் !!பாலகிருஷ்ணன் 

Default Image

  

  • திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  • போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் சொல்லி இருக்கிறோம் என்று  பாலகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார். 

தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்துள்ளனர்.இவர்களுக்கான தொகுதி பங்கிடும் இறுதி செய்யப்பட்டு விட்டது.இந்நிலையில் திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைசிறுத்தைகள் , இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இருந்து வருகின்றனர்.

நேற்று  திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்தனர்.

 

இதன் பின்  திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக – காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது.

Image result for stalin balakrishnan

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக  திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன்  பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், திமுக உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக உள்ளது.போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் சொல்லி இருக்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்