ஆளுநர் பதவி விலக வேண்டும் திமுக கூட்டணி கட்சிகள் அறிக்கை

Default Image

பெரிய பதவியை எதிர்பார்த்து பாஜகவை மகிழ்விக்க எண்ணி , அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதாக இருந்தால், ஆளுநர் பதவி விலக வேண்டும் என மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

திமுக. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் ஆளுநரின் செயல்பாடு குறித்து விமசித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில், ஆளுநர் எதாவது பெரிய பதவியை எதிர்பார்த்து பாஜகவை மகிழ்விக்க எண்ணி அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதாக இருந்தால் ஆளுநர் பதவியிலிருந்து விலகி சொந்த கருத்தை தெரிவிக்கலாம் என்றும், மேலும் ஆளுநர் சனாதனம், திராவிடம், திருக்குறள், பட்டியலின மக்கள் தொடர்பான அபத்தமான கருத்துக்களை தெரிவித்து வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் , சமீபத்தில் ஆளுநர் ஆர் என் ரவி ” ஒரு நாடு என்பது மதம் சார்ந்து தான் இருக்க வேண்டும்” என்ற கருத்தை கண்டித்தும் அந்த கருத்து அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து இதுபோன்ற ஒரு மதத்திற்கு மட்டுமே ஆதரவாக பேசுவதால் இருந்தால், அரசியலமைப்பின்பால் பதவியேற்ற தனது ஆளுநர் பதவியை விட்டு விலகி , இதுபோன்ற கருத்துக்களை சொல்லட்டும் இல்லையென்றால் இதுபோன்று பேசுவதை நிறுத்திகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்