நாளை நாடாளுமன்ற முன் தி.மு.க கூட்டணி கட்சிகள் போராட்டம்- டி.ஆர்.பாலு .!
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு 3,842 மையங்களில் 11 மொழிகளில் 15.97 லட்சம் பேர் எழுதுகின்றனர். நேற்று தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வு பிரச்னை குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் நாளை திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தவுள்ளதாகவும், இந்த போராட்டம் நடத்த கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை முதல் தொடங்கி விடுமுறையின்றி அக்டோபர் 1-ம் தேதிவரை நடைபெறும் எனவும், கொரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.