ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் இன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் .
தொடர்ந்து சர்ச்சையாக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. இந்த போராட்டம் மட்டுமல்லாமல், விரைவில் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இதில், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக தலைவர் வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், கூட்டணி கட்சிகளை சேர்ந்த காஜர்மைதீன், விசிக தலைவர் திருமாவளவன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் என 11 கூட்டணி கட்சி தலைவர்கள் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
திமுக கூட்டணிக் கட்சியின் கூட்டறிக்கை:
தமிழ் நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மானதாகவும் இருக்கின்றன. அரசியல் சட்டமன்ற மாண்பைக் குலைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தும் வரை நமது போராட்டம் ஓயாது. மக்களாட்சியின் மாண்பைக் காக்க நினைக்கும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்று திரண்டு வாரீர் என வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆளுநர் பேச்சு :
முன்னதாக, கூடங்குளம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களுக்கு அந்நிய நாட்டில் இருந்து பணம் வந்ததாகவும் குற்றம் சாட்டினார். இந்த சர்ச்சை கருத்துக்களுக்கு தற்போது தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…