திமுக கூட்டணி இன்று உண்ணாவிரத போராட்டம் – காவல்துறை அனுமதி மறுப்பு
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 22-வது நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே கடந்த 14-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்த நிலையில் உண்ணா விரதம் இருந்தனர்.
ஆகவே விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் இன்று உள்ள உண்ணாநிலைப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு சட்டத்தின் படி போராட்டம் நடத்துவதற்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.