இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக கூட்டணி தலைவர்கள் தயாராக உள்ளோம்- மு.க.ஸ்டாலின்
இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக கூட்டணி தலைவர்கள் தயாராக உள்ளோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கலைஞர் பிறந்தநாளான செம்மொழி நாளில் சொல்கிறேன். இந்தி திணிப்பில் சமரசம் கிடையாது இந்தி திணிப்பை என்றைக்கும் எதிர்ப்போம்.
இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக கூட்டணி தலைவர்கள் தயாராக உள்ளோம் .இன்னும் சில தினங்களில் போராட்டத்திற்காக ஒன்றுகூட உள்ளோம். தயாராக இருங்கள் என்று பேசினார்.