திமுக கூட்டணி தீய சக்தி; ஆளுங்கட்சி கூட்டணி துரோக சக்தியை தோற்கடிக்க வேண்டும்- டிடிவி தினகரன்..!
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் அமமுக மற்றும் கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் இருவரையும் ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அமமுகவுக்கு வாய்ப்புத் தரும் விதமாக மக்கள் வாக்களிக்க வேண்டும். திமுக கூட்டணி தீய சக்தி; ஆளுங்கட்சி கூட்டணி துரோக சக்தியை தோற்கடிக்க வேண்டும்.
அதிமுகவும், பாஜகவும் தமிழ் மக்களுக்குத் தீங்கு விளைவித்து வருவதாகவும், அதனால் அவர்களை மக்கள் புறம்தள்ளும் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் எனவும் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் கட்ட பஞ்சாயத்து அதிகரிக்கும் என கூறினார்.