திமுக கூட்டணி : நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டி.!
DMK-CPI : வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட , தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழக கட்சியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மதிமுக, கொமக, முஸ்லீம் லீக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
Read More – திமுக கூட்டணி – மதுரை, திண்டுக்கல்லில் சிபிஎம் போட்டி
அதன்படி, திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில், எந்த தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட உள்ளது என்பது குறித்த ஆலோசனை இன்று திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரும் தேர்தலில் மதுரை மற்றும் திண்டுக்கல் மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Read More – மத்திய அரசை எதிர்ப்பதில் தயக்கம் ஏன்? தவெக தலைவர் விஜய் மீது விமர்சனம்.!
அதனை தொடர்ந்து, திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, இதே தொகுதிகளில் தான் 2019 தேர்தலிலும் இக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Read More – 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல்… பாஜகவிடம் கொடுத்த ஓபிஎஸ்!
கடந்த 2019 தேர்தலில நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி CPI கட்சியை சேர்ந்த M.செல்வராஜ் வெற்றிபெற்றார். அதே போல திருப்பூர் தொகுதியிலும் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி CPI கட்சியை சேர்ந்த K.சுப்பாராயன் வெற்றிபெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.