மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்பு சின்னம் அணிய வேண்டும் என்று திமுக தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி இருக்கிறது. சென்னை தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்கு இடையில் தான் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது.ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.எனவே டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில்,மதுக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் அதிமுக அரசை கண்டித்து கருப்புச் சின்னம் அணிய வேண்டும்.கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. இன்று காலை 10 மணிக்கு கருப்பு சின்னம் அணிந்து 5 பேர் வீட்டு வாசலில் 15-நிமிடம் எதிர்ப்பினை பதிவு செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…