இளம்பெண் தற்கொலை – திமுக நிர்வாகி சகோதரர் போலீசில் சரண்.!

Default Image

இளம்பெண் சசிகலா தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி சகோதரர் புருஷோத்தமன் மதுராந்தகம் டிஎஸ்பி அலுவலகத்தில் சரணடைந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே நைனார் குப்பத்தை சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சசிகலா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகஅவரது சகோதரர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புருஷோத்தமன் மற்றும் அவரது நண்பர் இருவரும் சசிகலாவிற்கு தெரியாமல் அவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்,  சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக புருஷோத்தமன் மற்றும் அவரது நண்பர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளம்பெண் சசிகலா தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி சகோதரர்  புருஷோத்தமன்  சரணடைந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்