மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை!
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மு.க.ஸ்டாலின், திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளை இன்று 7வது நாளாக சந்தித்து வருகிறார்.
காலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்த அவர், மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். திமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.