முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்போம் என்கிற பொருள்படும்படி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முயற்சி செய்ய உள்ளதாக கூறினார்.
ஒருவேலை நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை என்றால் மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்போம் என்றார். பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதிக்கப்படும் போது, தமிழகத்தில் உள்ள மாணவர்கள் எத்தனை நாளைக்கு உத்தமசீலர்களாக இருப்பது எனவும் கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வில் மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்போம் என்று கே.என்.நேரு பேசிய போது அருகில் இருந்து கைதட்டி உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…