தேமுதிக தலைவர் விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதாக வரும் தகவல் தவறானது என்று பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிகவில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்து பொதுக்குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார்.
செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுதியாக தெரிவித்தார். செயல் தலைவராக பிரேமலதா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் விளக்கம் அளித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்பது முற்றிலும் தவறான தகவல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அதன்படி, தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர்கள் மாவட்ட அலுவலகங்களில் விருப்பமனு கொடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல் நடத்தும் ஏற்பாடுகள் துவங்கி உள்ளன.
அதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில், வார்டுகள் வரையறை செய்யப்பட்டு உள்ளன. டிசம்பர் மாத இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…