மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என அக்கட்சி துணைத் தலைவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தொகுதி மற்றும் எண்ணிக்கை குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைப்பதா என மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எட்டப்படும் என அக்கட்சி துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி துணைத் தலைவர் பொன்ராஜ், விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர், அவரது தலைமையிலான தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையவேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக கூறியுள்ளார்.
மேலும், கூடிய விரைவில் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷை சந்தித்து, அவர்களை மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு அழைக்க இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனிடையே, தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மீண்டும் இன்று மாலை நடைபெறுகிறது. இதன்பின் தனித்து போட்டியா? அல்லது கூட்டணியா? என முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…