விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா பின்னடைவை சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியிலிருந்து விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறது.இதில் தற்போதைய நிலவரப்படி,திமுகவானது பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில்,கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக கட்சியின் பொருளாளர் மற்றும் வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த்,குறைந்த அளவிலான வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
அதாவது,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் 25,323 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.தேமுதிக வேட்பாளர் பிரேமலதா 9902 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.இதற்கிடையே,பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன் 19,533 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…
சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…