தேமுதிக கட்சி 17 ஆவது ஆண்டின் தொடக்க நாள் கொண்டாட்டத்தை கட்சி கொடியேற்றி தொடங்கியுள்ளது.
விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி 16 ஆண்டுகள் நிறைவு பெற்று தற்போது 17 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ளது. இதனை அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி தொடங்கினார். விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கினார். தற்போது இந்த கட்சி 17 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இது குறித்து தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தேமுதிக துவங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து நாளை (14.09.2021) 17ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற உள்ளாட்சி தேர்தலில்,அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தேமுதிக பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…