கூட்டணி பேச்சுவார்த்தை மறைமுகமாக தொடங்கிய தேமுதிக..?
![Premalatha Vijayakanth](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Premalatha-Vijayakanth.webp)
மக்களவை தேர்தலை தொடர்ந்து ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிமுகவும் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், தேமுதிக மறைமுக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் கள்ளக்குறிச்சி, விருதுநகர் உட்பட குறைந்த 4 மக்களவைத் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுடன் தேமுதிக கேட்டு வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், சரிவிலிருந்து மீண்டும் மாநில கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெரும் முனைப்பில் வலுவான கூட்டணியில் அமைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்..?
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. இந்த முறை அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து தேமுதிக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கூட்டணி குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு பேச்சு வார்த்தை நிறைவு பெற்ற பிறகு தேமுதிக தரப்பில் வெளியாகும் என கூறப்படுகிறது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் மக்களவை தேர்தல் இதுவாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)