தேமுதிகவினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிளில் வந்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இதன் விலை உயர்வை காரணம் காட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய மாநில அரசுக்கு எதிராக தேமுதிக சார்பில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கடந்த 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது போராட்டத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக போராட்டம் நடைபெறும் பகுதிக்கு முன்பாக 500 மீட்டர் இடைவெளியில் இருந்து சைக்கிள் மூலமாக பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வந்துள்ளார். கொரோனா காலம் என்பதால் போலீசார் சைக்கிள் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரித்த நிலையிலும் அவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…