தேமுதிக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம நேர்காணல் மார்ச் 6 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு அளித்தவர்களிடம் கீழ்க்கண்ட தேதிகளில் தேமுதிக தலைமை கழகத்தில் நேர்காணல் மார்ச் 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-தேதி காலை 10.30 மணிக்கு கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் நேர்காணலில் கலந்து கொள்ளும் எனவும் 6-தேதி மதியம் 2 மணிக்கு கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7-ம் தேதி காலை 9 மணிக்கு தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கலந்து கொள்ளும் எனவும் மதியம் 2 மணிக்கு தஞ்சாவூர், சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8-ம் தேதி காலை 9 மணிக்கு மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும் மதியம் 2 மணிக்கு திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்கள் கலந்து கொள்ளும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…