பிரேமலதா தலைமையில் தேமுதிக மா.செ கூட்டம்! 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
இன்று பிரேமலதா தலைமையில் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில், 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக தேமுதிக உயர்மட்ட குழுக்கள் தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
இதில் ஒரு பங்காக இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டமானது சென்னையில் உள்ள கோயம்பேட்டில் நடந்தது. இதில் முக்கியமான 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அந்த 10 தீர்மானங்கள் என்னெவென்றால் …,
- தமிழகம் முழுவதும் உள்ள நமது கழகத்தினரும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து விஜயகாந்த் நினைவு நாளை வருடம் தோறும் அஞ்சலி செலுத்துவோம்.
- தமிழகத்தில், டாஸ்மாக் விற்பனை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், கள்ளச்சாராயம் தமிழகத்தில் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
- பாலியல் வன்கொடுமையையும் தடுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டத்தால் அதனைத் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போர்க்கால அடிப்படையில் புதிய திட்டங்களை கொண்டு வந்து, சாலைகள் மற்றும் போக்குவரத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும்.
- மாநகராட்சியின் சொத்து வரியை மீண்டும் அதிகமாக உயர்த்தி, மக்களுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த செயலைக் கண்டிக்க வேண்டும்.
- கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடுகள் செய்வதை கைவிட்டு விட்டு, தமிழக விவசாயிகளும், கர்நாடகா விவசாயிகளும் பயன்பெறுகின்ற வகையில் ராசிமணல் என்ற இடத்தில் அணை கட்டினால் இரண்டு மாநிலமும் நீர் வசதி பெறுகின்ற வகையில் தீர்வு காண வேண்டும்.
- மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு சம்பளம் உயர்வும், ஆசியர்களுக்கு பழைய ஊதியமும், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்.
- தமிழகத்தில் கனிமவள கொள்ளை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், கன்னியாகுமரி வழியாக கேரளா மாநிலத்திற்கு கனிம வளம் கடத்திச் செல்லப்படுவதை தடுக்க வேண்டும்.
- திமுக ஆட்சிக்கு எந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மின்சாரக்கட்டணம் மூன்று முறை அதிகமாக உயர்த்தி இருக்கிறது. இதனால், அரசை கடுமையாக எச்சரிப்பதுடன், உடணடியாக உயர்ந்திய கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்.
- நம் தமிழ்நாட்டிற்காகவும், தமிழக மக்களுக்காகவும் கேப்டன் கொண்ட லட்சியத்தை நிறைவேற்றிட வேண்டும் என உறுதியேற்று அதனை செய்து முடிக்க வேண்டும்.
தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம் பொதுச் செயலாளர் அண்ணியார் தலைமையில்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன …@PremallathaDmdk /@vj_1312 @captainnewstv /@dmdkparty2005 pic.twitter.com/YrPteNMoLt— E Balaji (@EBalajiCaptain) November 10, 2024