கொரோனா தொற்றால் மறைந்த நடிகர் வெங்கட் சுபாவின் மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல்..!
நடிகரும்,விமர்சகருமான வெங்கட் சுபா இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில்,அவரது மறைவிற்கு நடிகரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றானது மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.குறிப்பாக,கடந்த சில வாரங்களாகவே திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
அந்த வகையில்,நடிகரும்,பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் சுபா,கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு,சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி வெங்கட் சுபா இன்று உயிரிழந்தார். இதனையடுத்து,மறைந்த வெங்கட் அவர்களின் குடும்பத்திற்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில்,நடிகர் வெங்கட் சுபாவின் மறைவிற்கு நடிகரும்,தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மறைந்த வெங்கட் சுபா அனைவரிடமும் அன்புடன் பழகக் கூடிய ஒரு இனிமையான மனிதர். மேலும், சினிமா உலகில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது”,என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மறைந்த வெங்கட் சுபா அனைவரிடமும் அன்புடன் பழகக் கூடிய ஒரு இனிமையான மனிதர். மேலும், சினிமா உலகில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது#RipVenkatsubha pic.twitter.com/sMvwXNKX64— Vijayakant (@iVijayakant) May 29, 2021