ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தை என பெயர் பெற்ற கோயம்பேடு காய்கறி சந்தையை நிர்வாக காரணங்களுக்காக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமானது, கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியின் இந்த முடிவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு அந்த இடத்தில் வணிக வளாகம், நட்சத்திர ஓட்டல், விளையாட்டு மைதானம் போன்றவை அமைக்க முடிவு செய்துள்ளது.
லாப நோக்கத்திற்காக கோயம்பேடு மார்க்கெட்டை மாற்ற திட்டமிட்டு இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். கோயம்பேடு மார்க்கெட் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டால், இங்கு சொந்தமாக கடைகளை வாங்கி உள்ள வியாபாரிகளின் நிலைமை கேள்விக்குறியாகும். மேலும் கோயம்பேடு மார்க்கெட்டை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். என தெரிவித்துள்ளார்.
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…