லாப நோக்கத்திற்காக கோயம்பேடு மார்க்கெட் இடமாற்றம்.? விஜயகாந்த் கடும் கண்டனம்.!

Koyambedu Market- DMDK Leader Vijayakant

ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தை என பெயர் பெற்ற கோயம்பேடு காய்கறி சந்தையை நிர்வாக காரணங்களுக்காக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமானது, கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியின் இந்த முடிவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு அந்த இடத்தில் வணிக வளாகம், நட்சத்திர ஓட்டல், விளையாட்டு மைதானம் போன்றவை அமைக்க முடிவு செய்துள்ளது.

லாப நோக்கத்திற்காக கோயம்பேடு மார்க்கெட்டை மாற்ற திட்டமிட்டு இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். கோயம்பேடு மார்க்கெட் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டால், இங்கு சொந்தமாக கடைகளை வாங்கி உள்ள வியாபாரிகளின் நிலைமை கேள்விக்குறியாகும். மேலும் கோயம்பேடு மார்க்கெட்டை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்