விருதுநகர்: தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆதரவுடன் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.
தேர்தல் முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்றார். தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்று இருந்தார்.
இந்த நிலையில் தான் , வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவர் கூறுகையில், விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கடிக்கப்படவில்லை. அவர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார்.
தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் மாவட்ட ஆட்சியரே கூறினார். வாக்கு எண்ணிகையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு ஏற்பட்டுள்ளது.
3 மணி முதல் 5 மணி வரையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கூறி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட உள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…