#BREAKING: தேமுதிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது..!
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் கூட்டணியில் போட்டியிடக்கூடிய கூட்டணி கட்சிகளுக்கான இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 4-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
இதற்கிடையில், சில கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றனர். இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக திருப்பூர் மாநகராட்சியில் 24 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.