விஜயகாந்த் இல்லத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேமுதிக கொடி..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த 12-ஆம் தேதி வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து, நேற்று மீண்டும் மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து வரப்பட்டுள்ளார் எனவும், பரிசோதனை முடிந்து 2 நாட்களில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்…!
மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்று நேரத்திற்கு முன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை முன்னிட்டு அவரது இல்லத்தில் ஏற்றி வைக்கப்பட்டு இருந்த தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.