DMDK : நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தொடர் இழுபறி நீடித்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக, அதிமுக என இரண்டு தரப்பிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, இறுதியாக அதிமுகவுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்துள்ளது. முதல் முறையாக சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினர்.
அப்போது, தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். அதன்படி, திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது அதிமுக. இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வாழ்ந்து புரட்சி செய்த அதிமுக அலுவலகத்திற்கு வந்தது மகிழ்ச்சி.
அதிமுக – தேமுதிக கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி, ராசியான கூட்டணி மற்றும் வெற்றிக் கூட்டணி. 2011-ல் அதிமுக, தேமுதிக இடையே உருவான மாபெரும் வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகி உள்ளது. இதனால், 2011 வரலாறு மீண்டும் திரும்பும். எனவே, அதிமுக தலைமையிலான மாபெரும் கூட்டணி பல போட்டிகள் பல்வேறு சவால்களை கடந்து மாபெரும் வெற்றி பெரும் என கூறினார். மேலும், அதிமுக – தேமுதிக கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களிலும் தொடரும் எனவும் தெரிவித்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…