பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு?
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையிலும், தொகுதிப் பங்கீட்டு ஆலோசனையிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
திமுகவை பொறுத்தவரை அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது கூட்டணி குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகிவிலை. அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்த நிலையில், பாஜக களத்தில் தனித்து செயல்பட்டு வருகிறது. இதனிடையே, தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் யாருடன் கூட்டணி வைப்பது என்று குழப்பத்தில் உள்ளன. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஸ்பெயின் நாட்டில் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் உரை!
இந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாகவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து வரும் 7-ம் தேதி தேமுதிக அறிவிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வரும் 7ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 4 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி கொடுக்கும் கட்சியுடன் மட்டுமே தேமுதிக கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு செய்திருப்பதாக தற்போது கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
அதுமட்டுமில்லாமல், மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகியோர் போட்டியிடும் வகையில் கேட்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் தேமுதிக கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.