#ElectionBreaking: அமமுகவுடன் பேச்சுவார்த்தை நிறுத்தம்.. தனித்துபோட்டியிட தேமுதிக முடிவு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை தொடர்ந்து, அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் தற்பொழுது இந்த பேச்சுவார்த்தையை நிறுத்தி, தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் தாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காத காரணத்தினால் கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதனைதொடர்ந்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின், தனித்து போட்டிட தயாராக உள்ளதாகவும், வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பாக அவர்களிடம் கருத்து கேட்கவேண்டும் என தேமுதிக தெரிவித்துள்ளது.
இதில் 140 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை தயார் செய்து வெளியிடவிருந்த நிலையில், அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள். அதில் பலர், தனித்து போட்டியிட தயாராகஇல்லையெனவும், கூட்டணி அமைத்தால் நல்லது என கருத்து தெரிவித்தனர். பின்னர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவரிடம் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மையா? என செய்தியாளரின் கேள்விக்கு அவர், பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை தான் என்றும், எப்போது வேண்டுமானாலும் கூட்டணி இறுதி செய்யப்படலாம் என தெரிவித்தார். இதனால் விரைவில் அமமுக- தேமுதிகவுடன் கூட்டணி உறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தையை நிறுத்தி, தனித்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளது.