Vijayakanth Health Issue [File Image]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
முதலில், விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. பின்னர், அவரது மார்பில் அதிக சளி தேங்கி இருந்ததன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சைக்காகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது நெஞ்சு பகுதியில் உள்ள சளியை அகற்றுவதற்கான சிகிச்சைகள் நடைபெற்றது. மேலும் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை சார்பில் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.
தனது அரசியல் வரிசை அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி!
தற்பொழுது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு உறுதிசெய்துள்ளது. சளி, மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக சுமார் ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது உடல்நிலை பூரணமாக குணமடைந்ததால் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பியுள்ளார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…