3 மேயர் இடங்களை கேட்கிறது தேமுதிக

அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை தேமுதிக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.இதனையடுத்து நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேமுதிகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.இந்த பிரச்சாரம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது.
தற்போது தமிழகத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி என்று தேமுதிக தெரிவித்தது.
இதனிடையே சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் 3 மேயர் இடங்களை தேமுதிக கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025