விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவிப்பு!

premalatha vijayakanth

விக்கிரவாண்டி : இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து இருக்கிறார். விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் வருகின்ற ஜூலை மாதம் 10 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர் கட்சி சார்ப்பில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதைப்போல, நாம் தமிழர் கட்சி சார்பாக  மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம் (B.H.M.S., MD) போட்டியிடவிருக்கிறார் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் இருந்து 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்ரவாண்டி இடைத்தேர்தலை தங்களுடைய கட்சி புறக்கணிக்கிறது என பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  அறிக்கை வெளியீட்டு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்ரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள்.

இன்றய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடதப்படுகிறது. இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது.

இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் இன்றய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றக்கு கேள்விக் குறியக்கப்பட்டுள்ளது. என்பதை ஒட்டு மொத்த மக்களும், கழகத்தினரும் அறிவர். எனவே இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது” என கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay