விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது – பழம் நழுவி பாலில் விழுமா?

Default Image
  • ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தமிழகத்தில் படுஜோராக நடைபெற்று வருகிறது
  • கிட்டத்தட்ட இரு முனைப் போட்டி உறுதியாகியுள்ள நிலையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக மட்டும் இன்னும் இழுத்தடித்துக் கொண்டே வருகிறது

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற முடியும்.

இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக என இரு துருவங்களில் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. அதிமுகவில் பாஜக, பாமக என்ற இரு கட்சிகளும், திமுகவில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என இடதுசாரி இயக்கங்களும் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக எந்த அணிக்கு சேரும் என்பதை கிட்டத்தட்ட வெற்றியை தீர்மானிக்கும் இடமாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் சேர வேண்டுமானால் தேமுதிகவிற்கு பாமகவை விட ஒரு தொகுதிகள் அதிகம் வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றை தர முடியாது எனவும், 5 தொகுதியில் கண்டிப்பாக தருகிறோம் எனவும் கூறியுள்ளது அதிமுக. இதனை மறுத்த தேமுதிக 5 தொகுதிகள் மற்றும்21 தொகுதியின் இடைத் தேர்தலில் ஆதரவு ஆகியவற்றை அதிமுகவுடன் கேட்டது.

இது தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில், நேற்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று விஜயகாந்த் தலைமையிலான திமுக வின் ஆலோசனை கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த கூட்டம் முடிவு வரும் நிலையில் தான் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கப் போகிறோம் எனவும், எந்த கூட்டணியில் சேரப் போகிறார் எனவும் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்