ஆளுநருக்கு எதிராக தி.க., மதிமுக ஆர்ப்பாட்டம்!
சென்னையில் திராவிட கழகம் தலைவர் கீ.வீரமணி தலைமையில் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க இயற்றப்பட்ட அவசர சட்ட முன் வரைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்என் றவு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை முன் திராவிட கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என அக்கட்சி பொதுசியலாளர் வைகோவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக திராவிட கழகம் மற்றும் மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. திராவிட கழகம் தலைவர் கீ.வீரமணி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மற்றும் ஏரளமான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என திராவிட கழகம் தலைவர் கீ.வீரமணி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு இயற்றிய 20 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருக்கிறது. அன்றாட அரசியல் சாசன கடமையை செய்யாமல் தேவையில்லாதவற்றை ஆளுநர் பேசுகிறார்.