தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!
சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல், அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இன்று முதல் 30ம் தேதி ஆகிய மூன்று நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பேருந்துகுளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து 11.176 பேருந்துகள் இயக்கப்படும்.
பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டு மொத்தமாக 14.086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இன்று
அதன்படி, சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல், அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு இன்று வழக்கமாக இயங்கும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 700 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நாளை
தீப ஒளி திருநாளை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் புறநகர் பேருந்து நிலையங்களில் நாளை முதல் அக்டோபர் 30ஆம் நாள் வரை 300 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் புறப்படும் பேருந்துகளின் நடைமேடை குறித்த விவரம் இதோ…
தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் புறப்படும் பேருந்துகளின் நடைமேடை குறித்த விவரம்👇#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #DeepavaliSpecial | @CMOTamilnadu | @sivasankar1ss | @pkanamarla | @TNDIPRNEWS | @official_kcbt… pic.twitter.com/EnCiY4zM6f
— ArasuBus (@arasubus) October 27, 2024
சென்னையிலிருந்து எந்தெந்த பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் விவரம் இதோ…
தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
(28.10.2024 [நாளை] முதல் 30.10.2024 வரை)#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #DeepavaliSpecial | @CMOTamilnadu | @sivasankar1ss | @pkanamarla… pic.twitter.com/LAE3t9Ie1e— ArasuBus (@arasubus) October 27, 2024