தீபாவளி சிறப்பு பேருந்து.. முன்பதிவு மூலம் ரூ. 5.84 கோடி வருவாய்..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிரமம் இல்லாமல் ஊருக்குப் பயணம் செய்ய செய்யவும், தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊருக்குத் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 6 இடங்கள் இருந்து மொத்தம் 8,753 பேருந்துகள் இயக்கப்பட்டு மூன்று லட்சத்து 97 ஆயிரத்து 553 பயணிகளும் பல்வேறு பகுதியில் இருந்து மற்ற பிற ஊர்களுக்கு 4564 பேருந்துகள் இயக்கப்பட்டு 2 லட்சத்து 28 ஆயிரம் பயணிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 317 பேருந்துகள் மூலமாக 6 லட்சத்து 25 ஆயிரத்து 553 பேர் பயணம் செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் 15, 16,17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 10414 பேருந்துகள் இயக்கப்பட்டு 4 லட்சத்து 68 ஆயிரம் பயணிகளும் பல்வேறு பகுதியில் இருந்து மற்ற பிற ஊர்களுக்கு 4 ஆயிரத்து 629 பேருந்துகள் இயக்கப்பட்டு 2 லட்சத்து 31 ஆயிரம் பயணிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 43 பேருந்துகள் மூலம் 6 லட்சத்து 99 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட 7 நாட்களில் மொத்தமாக 28,360 பேருந்துகள் மூலம் 13 லட்சத்து 24 ஆயிரத்து 553 பயணிகள் பயணம் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்ததன் மூலம் மொத்தமாக 5 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.