தீபாவளி சிறப்பு பேருந்து – 2.31 லட்சம் பேர் பயணம்.! ரயில்களில் அலைமோதும் கூட்டம்…
கடந்த 2 நாள்களை காட்டிலும், இன்று அதிகளவில் மக்கள் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை : தீபாவளியை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளதால் சென்னை ஸ்தம்பித்துள்ளது. இன்று (அரைநாள்) முதல் நவ.3 வரை தொடர் விடுமுறை வருவதால், திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல மக்கள் தொடங்கியுள்ளனர்
தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து இன்று 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் அரசுப் பேருந்து மூலம் 2,31,363 பேர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1,967 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 4,059 பேருந்துகளில் 2.31 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த 2 நாள்களை காட்டிலும், இன்று அதிகளவில் மக்கள் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
தீபாவளியைக் கொண்டாட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தாம்பரம் – ஜி.எஸ்.டி. சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் திரு. சமய்சிங் மீனா தெரிவித்துள்ளார்.
சிறப்பு ரயில்கள்
தீபாவளியை முன்னிட்டு 48 சிறப்பு ரயில்கள் 258 முறை இயக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்குச செல்லும் பயணிகளுக்காக கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். பேருந்துகளில் ஒரு பக்கம் கூட்டம் அலை மோத, ரயில்களில் அலைமோதும் கூட்டம்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025