தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு முன்பதிவு வருகின்ற 23-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், போக்குவரத்து நெரிசல் இன்றி மக்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப்பட உள்ளது.தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
மாதவரத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்பவும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.சிறப்பு முன்பதிவு வருகின்ற 23-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் .கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…