ரயில் பயணிகள் கவனத்திற்கு… தென்னக ரயில்வேயின் தீபாவளி சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.!
ரயில் பயணிகள் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணத்தின்போது கொண்டு செல்ல வேண்டாம். என தென்னக ரயில்வே துறை மக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ளது.
தீபாவளி என்றாலே, புத்தாடை, பட்டாசு தான் நம் நினைவில் வந்துவிடுகிறது. அதில் பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல, பேருந்து, ரயில் என பொது போக்குவரத்துகளில் பட்டாசு பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அது குறித்த துண்டு பிரசுரங்களை ரயில்வே நிர்வாகம் விநியோகம் செய்து வருகின்றது.
தென்னக ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ ரயில் பயணிகள் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணத்தின்போது கொண்டு செல்ல வேண்டாம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.’ என பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில், ‘ ரயில் பயணத்தில் பட்டாசு எடுத்துச்செல்ல கூடாது. அதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டு, உயிர் சேதம் ஏற்படலாம், ஆதலால் பட்டாசுகளை ரயிலில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே பயணிகளிடம் துண்டு பிரசுரத்தை ரயில்வே ஊழியர்கள் விநியோகித்து வருகின்றனர். என தென்னக ரயில்வே அதிகாரி விடீயோவில் பதிவிட்டுள்ளார்.
ரயில் பயணிகள் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணத்தின்போது கொண்டு செல்ல வேண்டாம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளது#safety pic.twitter.com/JQioe5bVTv
— Southern Railway (@GMSRailway) October 18, 2022