தீபாவளி : பட்டாசு வெடிப்பது குறித்து காவல்துறையின் அறிவுரை..!
தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையடுத்து, தீபாவளி அன்று 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி,
- பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து எறிந்து விளையாடக் கூடாது.
- பட்டாசுகளை வெடிக்கும் போது தகர டப்பாக்களை போட்டு வெடித்தால் டப்பா தூக்கி எறியப்படும்;இவ்வாறு செய்யக்கூடாது.
- குடிசை&மாடி கட்டடங்கள் அருகில் ராக்கெட் வெடிகளை வெடிக்கக்கூடாது.
- பட்டாசு விற்கும் கடை அருகில் புகை பிடிப்பதோ, சிகரெட் துண்டுகளை வீசி எறிவதோ கூடாது.
- பட்டாசு சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ / கடைகளிலோ ஊதுவத்தி கொளுத்தி வைக்கக்கூடாது.
- கால் நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
- மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
- பட்டாசு வெடிக்க அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.