தீபாவளி பண்டிகை! அக்.29 முதல் நவம்பர் 12 வரை பட்டாசு விற்பனை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. அதன்படி, தீபாவளியை முன்னிட்டு அக்.29 முதல் நவம்பர் 12 வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை தீவுத்திடலில் 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை நடைபெறும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவித்துள்ளது. பட்டாசு விற்பனைக்காக சென்னை தீவுத்திடலில் 55 கடைகள் அமைக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.