தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. வருடா வருடம் தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்து வருகிறது.அதேபோல் இந்த ஆண்டிற்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு மொத்தம் 20% போனஸ் வழங்கப்படும் .அதில் 8.33 % போனஸ் மற்றும் 11.67 % கருணைத்தொகை வழங்கப்படும்.
அதேபோல் நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மொத்தம் 10% போனஸ் வழங்கப்படும்.அதில் போனஸ் 8.33 % மற்றும் 1.67 % கருணைத்தொகை வழங்கப்படும்.
முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை:
நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.8,400 போனஸ் வழங்கப்படும்.அதேபோல் அதிகபட்சமாக ரூ.16,800 போனஸ் கிடைக்கும்.3 லட்சத்து 58 ஆயிரம் ஊழியர்களுக்கு ரூ 486.96 கோடி போனஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…