தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது தமிழக அரசு.அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33% வழங்கப்படும், கருணை தொகை 11.37 % வழங்கப்படும்.லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு உபரி தொகையை கணக்கில்கொண்டு 20% போனஸ் தரப்படும். நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.வீட்டு வசதி வாரியம், குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரிய ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் பிற கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்கப்படும் நிறுவனங்கள் ஒதுக்கும் உபரித்தொகைக்கு ஏற்ப 20% அல்லது 10% போனஸ் வழங்கப்படும்.போனஸ் அறிவிப்பால் 3,48,503 பேர் பலனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025