தீபாவளி 2022: தவிர்க்க வேண்டியவை, கடைபிடிக்க வேண்டியவை.! அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.!
தீபாவளி பண்டிகையை சிறப்பாக பாதுகாப்பாக கொண்டாட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது தமிழக அரசு.
தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட பட உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையோட்டிக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும் என பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவைகளாகும்.
இதுபோன்று தீபாவளி அன்று தவிர்க்க வேண்டியவை; அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் மேலும் ஒரு நடவடிக்கையான தீபாவளி பண்டிகைக்காக இந்தாண்டு தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு இதுபோன்று தீபாவளி பண்டிகையை சிறப்பாக பாதுகாப்பாக கொண்டாட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.