திவாகரன் துரோக கும்பலுடன் சேர்ந்துள்ளார் : டிடிவி.தினகரன்..
தனக்கும் தனது முன்னாள் மாமாவான திவாகரனுக்கும் எந்த சொத்து தகராறும் இல்லை என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திவாகரன் துரோக கும்பலுடன் சேர்ந்தததுதான் தங்களுக்கிடையேயான பிளவுக்குக் காரணம் என்றார்.