இளைஞரணி மாநாட்டை திசை திருப்பும் நோக்கம்- அமைச்சர் சேகர்பாபு..!

Sekar Babu

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில்” நாளை அயோத்தி கோயில் குடமுழுக்கு நேரலையை கோவில்களில் ஒளிபரப்பவும், சிறப்பு பூஜைகள் நடத்தவும் காவல்துறையை அனுமதி மறுப்பது கண்டத்துக்குரியது. அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்த நாளை அனுமதிக்கப்படவில்லை, பந்தல்களை அகற்றுவோம் என ஏற்பாட்டாளர்களை காவல்துறை மிரட்டுகிறது. இந்து விரோத, வெறுக்கத்தக்க செயல் கண்டனத்திற்குரியது “என பதிவிட்டுள்ளார்.

3 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு தனது எக்ஸ் தளத்தில் “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.

முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது” என விளக்கம் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்