மக்களே கவனம்! இந்த மாவட்டங்களில் 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் மாலை 4 மணி வரையில் 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்கக்கடலில் புயலாக உருவெடுக்க உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, மாலை 4 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையிலிருந்து 530 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு தென்திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளது. இது, 15கி.மீ வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது எனவும் அடுத்த 6 மணி நேரத்தில் சென்னையை ஒட்டி நெருங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் மாலை 4 வரை கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர்,புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.
அதே நேரம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.