தமிழகம் முழுவதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
கஞ்சா விற்ற வழக்குகளில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்க கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குகளானது நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி புகழேந்தி, ஒருதுறையின் மீது குற்றம் சுமத்தும் போது, அந்த துறை நேர்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழக காவல்துறையின் சார்பாக 1,386 வழக்குகளில், 26,882 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்ட நீதிமன்றங்களில், 10,918 கிலோ கஞ்சா இருக்கிறது. மீதமுள்ள கஞ்சா தமிழ்நாடு காவல்நிலையங்களில் 13,808 கிலோ கஞ்சாக்கள் இருக்கிறது.
மேலும், தமிழக அரசு தரப்பில், இனிவரும் காலங்களில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா 3 மாதத்திற்குள் அளிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை காவலனியங்களில் வைக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…
சென்னை : சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை…
நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக…
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…