BREAKING தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரங்கள் .!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 292 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571-இல் இருந்து 621 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவனையில் சிகிக்சை பெற்ற 57 வயது பெண் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது .
இதையெடுத்து சென்னையில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் அதிகபட்சமாக 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.